JUNE 10th - JULY 10th
அம்மா '
அந்த பைத்தியகாரிச்சி...வீட்டு முன்னாடி வந்து நிக்கா..
கோவம்புடைக்க..உள்ளிலிருந்து வெளியே
வாரியலோடு வந்தவள்.அந்த பைத்தியகாரிச்சியை விளாச தொடங்கினாள்.
ஏன்டி..காலையில ஏன் வீட்டு முன்னாடி வந்து நிக்க.
தரித்திரம் தலையை பிச்சுக்கிட்டு ஏற்கனவே
ஆடிக்கிட்டு இருக்கு.இதுல நீ வேறயா..
போடி தூர..பைத்தியகாரிச்சி எதுவும் நடக்காத போலவே நகர்ந்தாள். தெரு முனையிலுள்ள மரத்தடி பிள்ளையார் கோவில் திண்டு தான் அவளது குடியிருப்பு.பிள்ளையாருக்கு மட்டும் அந்த சின்ன அறைக்குள்(சன்னதி) வயதான ஒரு சீரியல் பல்பு தொங்கிக்கொண்டு இருக்கும்.கோவிலை சுற்றிலும் கும்மிருட்டு. இரவெல்லாம் அவள் அங்கேயே தான் தஞ்சமடைகிறாள். முகத்தில் அரும்பு மீசையும,சடையாக மாறி போன தூர்நாற்றம் வீசும் கூந்தலும்,மஞ்சள் பூத்த உடைந்த பற்களுமாக, சீலையை மேலை ஏத்தி தன் பாவடை கிழிந்திருப்பதை ஊருக்கெல்லாம் அறிவித்தபடிஅழைந்துக்கொண்டிருப்பவள்..அவலட்சணமும்பொருந்திய அவளை. நேரே சந்திப்பதும்,பேசுவதும்
தீட்டாக எண்ணி தான் வாழ்கிறார்கள் தெரு மக்கள்.தெருவுக்குள்ளே அவள் நடக்கையில் மொத்த வீடுகளின் கதவுகளும் தானாகவே மூடிவிடுகின்றன.அந்த தெருவிலுள்ள
அவள் பிறந்த வீடு மழை வரும் போதெல்லாம் தன் இறுதிநாட்களை குறித்துக்கொண்டிருக்கிறது.தெருவில் நடக்கும் அசம்பாவிதங்களை அவள் தலையில் கட்டிவிடுவது வழக்கம்.ஒரு நாள்
அதே தெருவில் வசிக்கும் கிருஷ்ணனின் இளைய மகன் விளையாடிக்கொண்டிருக்கும் போது தெருவுக்குள் நுழைந்த பைத்தியகாரிச்சியை விநோதமாக இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். நெருங்கி வந்துக்கொண்டு இருந்தாள். அவன் அந்த நெருக்கத்தை விரும்பியது போல தோன்றியது.அவள் அருகே வந்தபோது மழலை சிரிப்பை அவளுக்காக கொடுக்க.. ஏற்றுக்கொண்டதை உறுதிபடுத்த அவனை கட்டியணைத்து முத்தம்
கொடுத்தாள்.வெறுத்தே ஒதுக்கிய சூழலில்
அந்த பிஞ்சு அன்பு அவளுக்கு பெரும் திருப்தியை கொடுத்தது.கெட்டிய அணைப்பை விடாமல் முத்தமழை பொழிய..
"என்ன விடுங்க" ..அவன் முனங்க தொடங்கிய நேரத்தில் வீட்டின் வெளியே வந்து முத்தக்காட்சியை பார்த்த கிருஷ்ணன் கோவத்தின் உச்சிக்கே சென்றார்.மகனை தன் பக்கம் இழுத்த பின்பு அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.கன்னம் சிவந்தது .கிருஷ்ணனின் கோவம் தணிய இன்னும் அறைகளையும்,அடிகளையும் வாங்கிக்கொண்டாள்.அவனை உள்ளே இழுத்துக்கொண்டு கதவை சாத்தினார்.அவளுக்கு தான் வாங்கிய அடிகளும்,அறைகளும பெரியதாக தெரியவில்லை. அந்த பிஞ்சு குழந்தையின் அரவணைப்புக்கும்,அன்புக்கும் நடுவில்.அவளை பார்த்து சிரித்திருக்க கூடாது...அவளை பார்த்திருக்கவே கூடாது...அவள் வீணாக அடி வாங்கியிருக்க மாட்டாள். என்ற குற்றயுணர்வுக்குள் கிருஷ்ணன் மகன் சிக்கி தவிக்கிறான்.
"மழலை என்றாலும் மனம் மனம் தானே"...
பைத்தியகாரிச்சியின் அப்பா கோவிந்தராஜ்.
தினக்கூலி. அம்மா வசந்தா அருகே உள்ள ஊர்களிலுள்ள பண்ணை வீடுகளில் வேலைசெய்துக்கொண்டிருந்தாள்.கோவிந்தராஜ்-வசந்தா இருவரும் காதல் திருமணம்.
திருமணமாகி அவர்கள் வந்த ஊர் இது.8 வருடங்களாக குழந்தை பேறு இல்லாமல்
பிராத்தனைகளுக்கும்,ஏக்கங்களுக்கும் மத்தியில்
கருவானவள் பைத்தியகாரிச்சி.கோவிந்துக்கும், வசந்தாவுக்கும் எல்லையற்றமகிழ்ச்சி..இத்தனை ஆண்டு காத்திருப்பிற்கு கிடைத்த கடவுளின் பிள்ளையாக கருத தொடங்கினர்.கோவிந்து
இப்போதெல்லாம் ஓய்வெடுப்பதேயில்லை... கிடைத்த எல்லா வேலைகளையும் செய்ய தொடங்குகிறார்.
"புள்ள பொறக்குதுனு தெரிஞ்சதுமே கோவிந்து மொகத்துல கலை வந்துருச்சேடே"
"ஆண்டவன் புண்ணியத்துல கொழந்தை நல்லபடியா பொறந்து உன் கஷ்டமெல்லாம் தீரனும்டே"
கோவிந்த்-வசந்தா கொண்டாட்டங்களில் பங்கெடுத்தார்கள் தெருமக்கள்.
தன் பிள்ளையின்பால் கொண்டிருந்த கனவுகளுக்கு... வேகமாக பணத்தை சேமிக்க தொடங்கினார் கோவிந்த்.வசந்தா மிகவும் கவனமாக இருக்க தொடங்கினாள்.மாதங்கள் நெருங்கி விட்டன.
நாளும்,பொழுதும் தங்கள் தெய்வீக குழந்தையை வரவேற்கதயாரகிவிட்டார்கள்.
அமாவாசை நாளொன்றில் வசந்தாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.அந்த நேரத்தில் கோவிந்த் வெளியே சென்றிருந்தார். வசந்தாவுக்கு துணையாக
எதிர்த்த வீட்டு வெத்தலை பாட்டி இருந்தாள்.வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் அவள் அலறிய சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுகாரர்கள் ஓடி வர..அவளை அருகிலேயுள்ள கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.கோவிந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வசந்தாவுக்கு கோவிந்த் அருகே இல்லாதது வலியை மேலும் அதிகபடுத்தியதாக உணர்ந்தாள்.சுகப்பிரசவம் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்தனர்.பிரசவத்தில் சிக்கல்கள் இல்லையென்றாலும் வசந்தாவின் ஒத்துழைப்பு அவசியம்.அவள் ஒத்துழைக்க கோவிந்த் அவசியம்...
வெளியே வெத்தல பாட்டி எரிச்சலுடன்...
"நேரம்,காலம் தெரியாம இவன் எங்க போய் தொலைஞ்சானோ".
இத்தன நாளா குதிச்சுட்டு கெடந்தானே.. இப்ப அவ துடிச்சுக்கிட்டு கெடக்கா.. இந்த நேரத்துல கூட இருக்காம எங்க தான் போனான்?
தன்னருகில் கோவிந்த் இல்லையென்பது அவளை உருத்திக்கொண்டு இருந்தது....வந்துக்கொண்டிருப்பதாக தகவல் சொன்னார்கள்.பிரசவ வலி உச்சதுக்கு சென்றது.
எதிர்ப்பார்த்திருந்த தருணம் நெருங்கிவிட்டது.பெரும் வலியின் அலறலும்..அழுகை குரலும் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்க தொடங்கின.
குழந்தை பிறந்தது.பெண் குழந்தை. வசந்தா மயக்கமானாள்.செவிலியரிடமிருந்து வெத்தல பாட்டி குழந்தையை வாங்கினாள்.கோவிந்த்-வசந்தாவின் ஓட்டுமொத்த சந்தோஷமும் தன் கைகளில் தவழ்வதை கண்டு பூரிப்படைந்தாள்.பெண் குழந்தை பிறந்திருப்பது இருவருக்கும் தெரிந்தால் அவர்கள் எப்படி கொண்டாட போகிறார்கள் என்பதை பாட்டிக்கு அனுமானிக்கவே முடியவில்லை.இன்னும் சில நிமிடங்களில் கொண்டாட்டங்கள் காணமால் போகுமென்பதை பாட்டியால் யூகித்திருக்கமாட்டார்.
பேரிடியான செய்தியொன்று மருத்துவமனை முன்பு..சண்முகம் மூலம் வந்து நின்றது.
பதற்றம் பதிந்த முகத்துடன் மருத்துவமனை உள்ளே வந்த சண்முகம்.வெத்தல பாட்டி அருகிலே சென்றான்.
எங்க?அவன காணும்.அவனுக்கு பொம்பளை புள்ள பொறந்திருக்கு.பாட்டியின் உற்சாகமும்,கொண்டாட்ட மனநிலையும் அவனை சென்று சேரவேயில்லை.
உணர்வற்ற உயிராக நின்றுக்கொண்டிருந்ததை பாட்டியால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.
வெடித்து அழ தொட்ங்கினான்...பாட்டிக்கு
ஒன்றும் புரியவில்லை.பாட்டியின் கேள்விக்கு
முன்பே தன் அழுகைக்கான காரணத்தை சொல்லிவிட... பாட்டி நிலைக்குழைந்து போனாள்.
கூடே வந்தவர்களையும் சோகம் சூழ்ந்துக்கொண்டது.
பாட்டி செய்வதறியாது திகைத்து பேச வார்த்தைகளே இல்லாமல் போன சமயம்.
எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி கோவிந்த் உயிரிழந்தாக ராஜன் சொன்னான்.பாட்டியின் புலம்பல் ஆஸ்பத்திரியெங்கும் பரவ தொடங்கின.
வசந்தாவால் எப்படி ஜீரணிக்க முடியும்?
குழந்தை பிறந்த நேரத்திலா?இப்படி ஆக வேண்டுமென்று?
உலுக்கியது.செவிலியர்கள் சிலர்அழ வேண்டாமென்று வற்புறுத்தியும் அவளால் துன்பத்திலிருந்து மீள முடியவில்லை.
வசந்தாவிற்கு மயக்கம் தெளிந்தாக சொன்னார்கள்...
எப்படி வசந்தாவை பார்க்க போகிறோம்?
என்ன பேச
போகிறாம்?0 என்பதெல்லாம் பாட்டியை பயமுறுத்திக்கொண்டே இருந்தன.வசந்தாவின் அறைக்குள் கதவை திறந்து நுழைந்தாள். குழந்தை வசந்தா அருகேயுள்ள தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தது. வசந்தா.. பாட்டியை எதிர்பார்க்கவில்லையென்பது அவளது பார்வையே கூறியது.சோர்வும்,ஆனந்தமும் கலந்த அவளது முகம் கோவிந்துவை தேடியது.பாட்டியிடம்
கேட்டாள் வசந்தா.பாட்டி வருவான்...என்று சமாதனபடுத்த முயன்றாள்.முடியவில்லை.
அங்கேயும் கட்டுபடுத்த முடியமால் அழ தொடங்கினாள்.கோவிந்துவின் மரணம் வசந்தாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
பிரசவ வலியையும்.. மிஞ்சும் அலறல் இழப்பின் வலி.
அவளால் ஏற்றுக்கொள்ள கூடியதா அது.வசந்தாவின் அலறலில் குழந்தையும் அழ தொடங்கியது.இருவரது அழுகையும் அந்த வார்டையே தொந்தரவு செய்தது."அப்பனை
கொன்ற குழந்தையென்று" அப்போதே குழந்தைக்கு பெயர் முடிவு செய்யப்பட்டது.குழந்தை பிறந்த
கொண்டாட்டத்துக்கு காரணமான அந்த மருத்துவமனையில் அன்றே கோவிந்துவின் உடற்கூராய்வும் நடைபெறுகிறது.குழந்தைக்கு வைத்த பெயர் சரியென்றும் முடிவாகிவிட்டது.
கோவிந்துவின் சேமிப்புகள் அவரது ஈமசடங்கிற்கு
செலவானது....துணையில்லா வாழ்வை நகர்த்த
தெரியாமல் தேங்கிபோனாள்.வெத்தல பாட்டியின் கவனிப்பும்,ஆறுதலும் பெரியதாக அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவேயில்லை.ஊர் முழுக்க
குழந்தைக்கு ராசியில்லாத குழந்தை,தரித்திரம்,
என வெவ்வேறு விதமாக பெயர் வைக்கப்பட்டது.
மறைமுகமாகவே குழந்தையின் மீது வெறுப்பு எல்லருக்குள்ளும் உண்டாகி போனது.வசந்தாவும் கூட தன் குழந்தையிடம் பெரிதாக தாய்மையை பகிர்ந்துக்கொள்ளவேயில்லை.வெறுப்பும்,ஒதுக்குதுலும் அதிகம் ஆட்பட்டுபோனாளே தவிர வேறோன்றும் கிடைக்கவில்லை அவளுக்கு.இதற்கிடையில் வெத்தலை பாட்டியின் அரவணைப்பு வசந்தாவின் மகளுக்கு ஆறுதலை தந்தது.வசந்தா தன் மகளை நினைத்து வருத்தமடைய தொடங்குகிறாள் நாளுக்குள் நாள்.வசந்தாவின் மகள் மிகவும் வெகுளித்தனமாகவும்,
மூளை வளர்ச்சி குறைபாடுடைய அறிகுறிகள்
அவள் செயலில்யெங்கும் நிறைந்திருப்பதை பார்த்து வர்கள் புதுபெயரான "பைத்தியகாரிச்சி" பெயரை சூட்டினார்.பைத்தியகாரிச்சிக்கு 8 வயதாகும் போது
வசந்தா மஞ்சள் காமாலையால் அவதியுற்று மரணமடைந்தாள்.வசந்தாவின் மரணத்திலும் கூட
பைத்தியகாரிச்சி அம்மா தூங்குவதாகவே நம்பினாள்...இனி முழுக்க அவளுக்கு வெத்தல பாட்டியே துணை.கோவிந்த்-வசந்தா சேமிப்புகளை
வைத்து பைத்தியகாரிச்சியை தன் காலம் முடியும் வரை பார்த்துக்கொள்ளலாமென முடிவெடுத்தாள்.
அக்கம்,பக்கத்தினர் வெத்தலை பாட்டியிடம்....
"அந்த சனியனை எங்காவது கொண்டு விட்றவேண்டியதானே"..
ஏன் தலையில தூக்கி வச்சு சுமக்குறீங்க?
அத்துவிடுங்க என கூறியும்.
தன் இரண்டு பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாட்டி....
பைத்தியகாரிச்சிக்கு அடைக்கலம் கொடுப்பது
வாழ்வு நிகழ்த்தும் அதிசயங்களே.
பைத்தியகாரிச்சியை வசந்தாவை விடவும் பாட்டி
கவனிக்க தொடங்கினாள்.பட்டுபாவாடை உடுத்தி..
தலை சீவி..கனகாம்பரம் பூ வைத்து அழகுபடுத்தி
அவளை வீதிகளில் உலாவ விடுவாள்.
அவளை எவ்வளவோ அழகுபடுத்தினாலும் அவளின் அந்த அவலட்சணமான சிரிப்பும்
மற்றவர்களுக்கு எரிச்சலைத்தான் ஊட்டும்.
தனிமனித வெறுப்புக்கு காரணங்கள் வலுவாக தேவையில்லை என்பதற்கு பைத்தியகாரிச்சியே
ஊதாரணம்.அன்று அதை போல பைத்தியகாரிச்சியை ஆடை உடுத்தி,பூவை வைத்து அழகுபடுத்திவிட்டு பாட்டி வெளியே சென்றிருந்தாள்.
இங்க பாருடி செஞ்சதை தின்னுட்டு,
பேசமா உட்காந்திட்டு இரு..
அங்க போனே இங்க போனேனு
அலைஞ்சு ஏன் மூச்சை வாங்காத.பதிலுக்கு
தன் அவலட்சணமான சிரிப்பை உதிர்த்தாள்...
பாட்டி வெளியே கிளம்பி சென்று நேரமானது
பைத்தியகாரிச்சியின் தனிமையை நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து பல நாள் காத்திருந்தது போல ரமேஷ்,முருகேசன்,மணி மூவரும்
வெத்தல பாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
வீட்டின் உட்புறத்தில் அமர்ந்து தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவளை.மூவரும் சத்தம் போட்டு
அழைக்க தொடங்கினார். அவள் வெளியே வந்து
மூவரையும் ஏறெடுத்து... எதுவும் கூறாமல்
கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பாட்டி இல்லையா.?
எல்லாம் தெரிந்திருந்தும் அவளிடம் சம்பிரதாய கேள்விகளை எழுப்பினர்.
கையில் வைத்திருந்த பண்டங்களை அவளிடம்
கொடுத்தனர்.அந்த அன்பு அவளை ஏதோ செய்தது
மதிய நேரம் என்பதால் ஜனநாடமாட்டம் இருக்காதென்பதை உணர்ந்தவர்கள் கதவை சாத்தினார்....உள்ளே அழைத்து சென்றனர்.
பாட்டி உடுத்திவிட்டு சென்ற ஆடைகளை இவர்கள்
ஏன் இப்போது கலைகிறார்கள் என்பது அவளுக்கு புதிராக தான் இருந்திருக்ககூடும்.
அவள் அலறவில்லை..இணங்கவில்லை அனுபவிக்கவும் விரும்பவில்லை அதன் ஆரம்பமும் முடிவும் தெரியாதவள். அதன் போக்குலேயே விட்டுவிட்டாள் போல..தங்களின் இச்சைகள் தீர்ந்ததை எண்ணி ஆசுவாசத்தோடு வெளியேறி சென்றனர்.அவள் நகராமல் அங்கேயே கிடந்தாள்
வேட்டையாடபட்டவைகள் மறுபடியும் எழ அவகாசம்
தேவைபடத்தானே செய்யும்.வெளியே சென்ற
பாட்டி வந்துவிட்டாள்... வீட்டிற்குள் நுழைந்ததும்
பைத்தியகாரிச்சி ஆடைகள் விலகி எல்லாம் ஏறக்குறைய நிர்வாணமாக
கன்னத்திலும்,முகங்களிலும் வேட்டையாடிய
மிருகதடங்களோடு.அவள் காலையில் வைத்து விட்ட கனாகம்பரம் உடலெங்கும் பரவிகிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றாள்.பாட்டி அவளை உலுக்கினாள்.
சோர்வடைந்த குரலில் அவள் முணுங்கியது.. என்ன புரிந்ததோ வாரியலை கொண்டு
விளாசினார்.. அவளுக்கு வலியை தாங்கும் சக்தியில்லை என்பது பாட்டிக்கு தெரியதாவாறு
பாட்டியின் கோவம் பார்த்துகொண்டது.
தலையில் அடித்து அழதொடங்கினாள்... அவளுக்கு
என்ன செய்வது?யாரிடம் முறையிடுவது?
யார் இதற்கு காரணமாக இருந்திருக்ககூடும் என்பதெல்லாம் ஒருபக்கம் குடைந்தாலும்.பாட்டிக்கு எதார்த்தம் நன்றாகவே தெரியும். யாராக இருந்தாலும் இவளால்
தனியாக போராட முடியாது. இவளோடு துணைக்கு வரவும் யாரும் தயாராக இல்லையென்பதை நன்கு உணர்ந்தவள் .பாட்டியால் முடிந்ததெல்லாம்
அந்த நான்கு சுவற்றுக்குள் புலம்பலும்,முணங்கலும்
மட்டுமே.
ஒன்னுமே தெரியாத இந்த பைத்தியத்தை ஏன் தலையில கட்டிட்டு போயிட்டீங்களே... பாவிங்களா.....
வயசான காலத்துல பொம்பள புள்ளையை
வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்...
பொண்ணா இது...பாட்டியின் ஒப்பாரியில்
பைத்திகாரிச்சியை சுமையாக,ஊராரை போல அவளும் பைத்தியமாக ஏற்றுக்கொள்வதாய்
முடிவெடுத்திருப்பாள்.அன்றிலிருந்து வெத்தலை
பாட்டியும் அவளை வெறுக்க தொடங்கினாள்.
ஒரே ஒரு ஆறுதல் பாட்டிக்கு வேட்டையாடப்பட்ட
நிகழ்வு யாருக்கும் தெரியாதென்பதே..அதுவும் அடுத்த நாளில் மறைந்து போகுமென்று யார் கண்டா?
மறுநாளே எப்பவும் போல தனக்கு நிகழ்ந்தது என்னவென்பதை புரியாதவள். தெருவினில் வலம் வந்தாள்.ஒருநாள தெருமுனை பிள்ளையார் கோவில் திண்டில் அமர்ந்திருந்த ராமேஷை கண்டாள்.அருகே சென்றாள் அவனை பார்த்து
பிரகாசிக்க குற்றயுணர்வே இல்லாத ராமேஷ்.
"ஏய் பைத்தியம்"
என்ன இங்க வந்து நின்னுட்டு இருக்க
ச்சீ.... போடி..விரட்ட தொடங்கினான்
அவள் அவனது கையை பிடித்துக்கொண்டாள்.
அழைத்தாள் அவனை. தடுமாற்றமடைந்தான்.
ஊரோடு விலகியே இருந்த பைத்தியகாரிச்சி
ஒருவேளை அது விளையாட்டு என்று நம்பியிருக்கலாம்.
கையை விடுடி.. அவள் கண்ணத்தில் அறைந்தான்.
தெருவோர் கூடினார்கள்.
இந்த லூசு ஏன் இவன் கைபுடிச்சு எங்க கூப்பிட்டு கெடக்கு?..
எழுந்த குழப்பங்களுக்கெல்லாம் தனது சமிக்கைகள் மூலம் அவள் சொன்ன பதில் சுற்றியிருந்தவர்களை அருவறுப்பு அடைய செய்தது. சந்தேகமே இல்லை அவள் அதை தான் சொன்னாள்.தகவலறிந்து
வந்த ராமேஷின் அம்மா பைத்திகாரிச்சியை தரையிலே போட்டு மிதிக்க தொடங்கினாள்.
"பொட்ட முண்டை உனக்கு கேட்குதோடி..என் புள்ள தான் கிடைச்சானா உனக்கு.
ச்சீ..உன்னையெல்லாம் உயிரோட வச்சிருக்கிறதே தப்புடி... அந்த கெழவியால தப்பிச்சுக்கிட்டு இருக்க...
அவளை காரிதுப்பி கூட்டம் நகர தொடங்கியது.
அவள் பார்த்தால்,பேசுவதை கேட்டால் தீட்டு என
தீர்மானித்து விட்டனர்.
அவர்கள் அந்த சூழலில்
உதிர்த்த "தேவிடியா முண்டை" வார்த்தை ஆழமாக இறங்கியது.அன்று முதல் சிறியவர்கள் கிண்டலாக "தேவிடியா போற பாரு"... என்றழைத்து சிரித்தனர்.
அந்த வார்த்தைக்கு அர்த்தம் அவர்களுக்கு தெரியாவிட்டாலும் தன் அம்மா,அப்பா கூறுவதை சரியென்று தானே அவர்களும் நம்பகூடும்.
அக்கம் & பக்கத்தினர் அனைவரும் பாட்டியிடம்
திட்டியும் அசிங்கமாக கூறியும் பாட்டி அவளை
வெளியே அனுப்பமுடியாமல் தவித்தாள்......
இத்தனை வலியை,அவமானங்களை கண்ட பின்பும் என்ன தான் பாசமோ தெரியவில்லையென்று பேசிக்கொண்டனர் ஊர் மக்கள்.
பைத்தியகாரிச்சி இப்போதெல்லாம் வீட்டிலே
இருப்புக்கொள்ளாமல் அழைந்து திரிகிறாள்.
கல்லை அடி மட்டும் தான் அவள் படவில்லையே தவிர மற்ற அனைத்தையும் கண்டுவிட்டாள்.
"அவள் இப்போது பொதுச்சொத்து"
சின்னசிறுவர்கள்,வாலிபர்கள் அவளை சீண்ட
ஆரம்பித்தனர்.யாரும் இல்லாத இடத்தில்
அவளை கட்டியணைப்பதும்,அவள் அந்தரங்க அங்களை தொட்டு துலாவவுவதுமாக இருந்தனர்.
பொது வெளியில் அவளை பார்த்தாலே தீட்டு.
மறைமுகமாக தங்கள் காம இச்சைகளுக்கு
அவளை தொடுவது. வழக்கமாக மாறிபோனது.
மனிதர்களின் மறைமுகம் தெரியாமல் இருப்பதும் கூட ஒரு விதத்தில் நல்லது தான்.நாயின் இறப்பில் வீசும் தூர்நாற்றத்தை மிஞ்சும் அளவுக்கு மறைமுகமான பகுதிக்குள் ஏதோ ஒன்று மீதம் இருக்க தான் செய்கிறது. மனித வாழ்கையில்.ஆதரவென்றிருந்த பாட்டியின் உயிரும் ஒரு நாள் பிரிந்தது.வெளியூரிலிருந்து வந்த பிள்ளைகள்
அவ்வூரிலிருக்கும் வீட்டை விற்பதை பற்றியும்
சொத்தை பங்கீட்டு கொள்வதை பற்றியும் பேசிக்கொண்டிருந்த போது பைத்தியகாரிச்சி மட்டும் நிலைகுழைந்து கண்ணீர் மல்கி இருந்தாள்.
பாட்டியின் வாரிசுகள் அவளை வெளியே துரத்திவிட்டு செல்ல போகிறார்கள்.
அவளுக்கென்று இனியாருமில்லை... இந்த தெருவை தாண்டிய உலகத்தை அவள் காணத்திருந்தாள்.
கோவிந்த்-வசந்த்தாவின் சேமிப்பு,பொருட்களை எடுத்துச்செல்வதால் அருகேயுள்ள தனதுக்கு நெருங்கிய வீட்டில் பைத்தியகாரிச்சிக்கு ஒருவேளை உணவை கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தி
சம்மதிக்க வைத்தார்கள் பாட்டியின் பிள்ளைகள்.பைத்தியகாரிச்சி எங்கே தங்குவாள்?. என்பதைபற்றியெல்லாம் கவலையேயில்லை....தெருவே உலகமென மாறி போனது. மேற்கும் கிழக்கும் நடப்பதே அவள் பொழுதுபோக்கு...அவளுக்கென்று தனிதட்டு ஏற்பாட்டில் ஒருவேளை உணவு மட்டும் வழங்கப்பட்டது.அவள் நாயாக கூட பிறந்திருக்காலாம் நல்ல சோறாவது கொடுத்திருப்பார்கள்.அவள் எங்கே இரவு செல்வாள்?எங்கு தாங்குவாள்? என்பதெல்லாம் கேள்விக்குறி? அவளை தெருவிட்டு அகற்ற என்னென்னவோ செய்து பார்த்தார்கள்.அவள்
மீண்டும் தப்பித்து வந்துவிடுவாள் அது அதிசயம் தான்.இல்லையென்றால் மனவளர்ச்சி குன்றிய இல்லத்தில் இரண்டு முறை அடைக்கப்பட்டும் திருப்பி வருவாளா??...அவள் யாரையும்
வீண் தொந்தரவு செய்வதே கிடையாது.ஒரு விதத்தில் அவளோடு போராடுவது எல்லோருக்கும்
பழகி போய்விட்டது.
ஒவ்வொரு முறையும் ஆதரவுகளை இழக்கும் போது மனிதன் ஒவ்வொரு முறையும் அனாதையாக தான்
மாறிக்கொண்டிருக்கிறான்.வருடங்கள் வேகமாக
சென்றுவிட்டன.இப்போது தெருவில் எல்லோருக்கும் வெவ்வேறு கிசுகிசு நிலவுகிறது.இந்த பைத்தியகாரிச்சிக்கு வயசு தான் என்ன இருக்கும்?
என்பதை பற்றி தான்.அது இன்றுவரை எல்லோருக்குள்ளும் குழப்பம் நீடிக்கிறது.கிருஷ்ணனின் கோவத்தை கண்ட பலரும்
சுதாரித்துக்கொண்டார்கள்... நமது குழந்தைகளையும்
இவள் சீண்ட கூடும்.. இனி இவளை எப்படியாவது துரத்தி அடிக்கவேண்டுமென்று முடிவெடுக்கின்றனர்.தெருவையே காவல் காக்கும்
பிள்ளையார் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம்
நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு பெரும்பாலோனரிடம் நன்கொடை வாங்கப்பட்டியிருந்தது.மும்பை சென்று பாத்திரக்கடையில் கொடிநாட்டும் தொழிலதிபர் ராமேஷ் அவர்களின் பங்கும் பெரியது.கும்பாபிஷேகத்திற்கு ராமேஷ் வருவதாக உறுதியளித்து இருந்தார்.பைத்தியகாரிச்சி
இப்போது அங்கு தங்குவதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை... ஆனாலும் அவளை அப்புறபடுத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் தோற்று தான் போனது....அவள் மீண்டும்,மீண்டும்,அங்கையே தான் தங்க தொடங்கினாள்.வேலைகள் மும்மரமாக நடந்துக்கொண்டிருநந்து.கோவில் கொஞ்சம் விரிவாக்கப்பட்டது சுவர் மீது மேல் பூச்சுயிட்டு
பழைய சிறிய பிள்ளையார் சென்று புது பிள்ளையார் LED விளக்குகளால் மிளிர்ந்து
கொண்டு இருந்தார்.. இந்த வேலைகள் நடைபெறுவது அவளுக்கு பெரும் பொழுதுபோக்காக இருந்தது.பக்கத்து தெருவை சேர்ந்தவர்களுக்கும் பைத்தியகாரிச்சியின் தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்பிருந்தே கிணற்று சண்டையும்,ஜாதி சண்டையும் அரங்கேறிய வண்ணம் இருந்தன.வசைவார்த்தைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருப்பார்கள்.
இந்த சண்டையானது முற்று பெறமால் வளர்ந்துவிட்டு பூதகாரமாகி போனது.இவர்களை பழிவாங்க தக்க சமயத்தை எண்ணிக்காத்துக்கொண்டிருந்தனர்.அந்த நாளானது கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் என்பது முடிவு செய்தனர்..தெருமக்கள் சொந்த பந்தகளோடு கொண்டாட்ட மனநிலையில் உள்ளபோது பிள்ளையார் சிலையை திருடி
அவர்கள் அனைவரையும் மறுநாள் கும்பாபிஷேகத்தில் அவமானபடுத்தவும் கோவிலை
இடிப்பதுமென்று முடிவு செய்து இரவு பத்துமணிக்கெல்லாம் வந்துவிட்டனர்.கும்பாபிஷேகம் வேலைகளில் ஈடுபட்டிருந்தோர் கலைந்து செல்ல நள்ளிரவு இரண்டு மணியானது.களத்தில் இறங்கிய இருவர் மெதுவாக கோவிலருகே வந்து நின்று தங்கள் வேலையை முடிக்க.. போகும் சமயத்தில்... ஒரு உருவம் அவர்களை அச்சுறுத்தும் தோனியில்
முன்னாடி வந்து நிற்பதை கண்டதும் திகைத்தார்கள்.
ஆனால் பயபடவில்லை.
டேய்..பைத்தியம் டா இது..
கொஞ்ச நேரத்துல பயமுறுத்திருச்சு..
ஒழுங்கா எங்காவது ஓடி ஒழிஞ்சுக்கோ
வீணா இங்க நிக்காத...
அவர்கள் எச்சரித்தும் அவள் நகரமால் தான் இருக்கிறாள்...
அவளின் பார்வையில் எந்த தடுமாற்றமும் இல்லை. எதிர்கொள்வதென முடிவு செய்துவிட்டாள்.அவளை அறைந்தார்கள்
அடித்தார்கள் அந்த உடம்புக்கு இதுவெல்லாம் வலியில்லையென்பதை அவர்களுக்கு புரிந்திருக்க
வாய்ப்பு இல்லை.மண்டையில் அடித்தும் சிறிதும்
சுனக்கம் காட்டாமல் இருப்பதை கண்டு அச்சபட்டார்கள்.பிள்ளையார் சிலையை உள்ளிருந்து ஒருவன் வெளியே தூக்கினான்.அவனை தாங்கினாள் கல்லையை எடுத்து எறிந்தாள் ரத்தம் வந்தது.அவளை கிழே தள்ளிவிட்டு ஓடி விடவேண்டுமென்று நினைத்தார்கள்.அவளை தள்ளிவிட்டு.. கோவிலை சுவற்றை கொண்டு வந்த கம்பிகளால் உடைக்க தொடங்கினர்.கிழே கிடந்தவள் அவர்களது காலைப்பற்றிக்கொண்டாள். கடிக்க தொடங்கினாள் அத்தனை ஆண்டு கோவமும்
அந்த கடியில் தெரிந்தது.அவன் மீது ஏறி உட்கார்ந்தாள். முடியை பிடித்து இழுத்து ஆட்ட தொடங்கினாள்.பிள்ளையாரை எடுத்து ஓடிவிட இன்னொருவன் அவனையும் தட்டிவிட்டாள்.சத்தம் கேட்டு சிலர் ஓடி வந்தனர்.இருவரும் அவளை பலமாக தாக்கிவிட்டு ஓடினர்.கையில் பிள்ளையார் தாங்கிபிடித்து வைத்துக்கொண்டிருந்தாள்.
ஓடிவந்த தெருமக்கள் அனைவருக்கும் நடந்தது என்னவென்பதை யூகிக்க முடிந்திருந்தது.
பிள்ளையாரை அவள் அங்கையே வைத்துவிட்டு ஒதுங்கி நின்றாள்.இந்த முறை அவர்களது பார்வையில் சிறிய கரிசனத்தை கண்டாள். அவர்கள்
அன்று எதுவும் பேசவில்லை.கலைந்து சென்றனர்.
பாதுகாப்பாக சிலர் அங்கையே தாங்கிவிட்டனர்.
.அவளுக்கு புதிதாக ஆனந்தம் வந்ததை உணர்ந்தாள்.பக்கத்து தெருக்காரர்கள் நினைத்து போல அன்று கும்பாபிஷேகம் நடைபெறவில்லை...
கும்பாபிஷேகம் அன்று காலை கோவில் திண்டு பகுதியில் பைத்தியகாரிச்சி செத்து கிடந்தாள்.
அவர்கள் தலையில் அடித்த அடியானது ரத்த உறைதலை ஏற்படுத்தி அவளை மரணிக்க செய்தது.
தெருமக்களுக்கு உண்மையில் பேரிழைப்பாக தோன்றியது அந்த நாள்.அவள் துக்கத்தை அனுசரித்தே கும்பாபிஷேகத்தை தள்ளிப்போட்டனர்.
விரட்டப்படுபோதெல்லாம் மீண்டும் வந்தவள்.
இந்த முறை வாராமல் போனதற்கு முந்தையை இரவில் காட்டிய அவர்களின் கரிசன பார்வைக்கூட அவள் போதுமென நினைத்திருக்கக்கூடும்.
அவள் திட்டென்றால்?அவள் தொட்டு காப்பாற்றிய
பிள்ளையாரும்,பிள்ளையாரை வணங்குவோரும் தீட்டு தானே?அவளது இறப்பினை தங்கள் விட்டு இறப்பாக எண்ண தொடங்கினர்.....
அவளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது...அதில் அவளுக்கு வெத்தலை பாட்டி வைத்த பெயர் இடம் பெற்றிருந்தது...
இத்தனை வருடம்
பைத்தியகாரிச்சி,மெண்டல்,அப்பனை கொன்றவள்,
மூழி,முண்டை,தேவிடியா என அழைக்கப்பட்டவளின்
பெயர் "அன்பரசி"...
#770
मौजूदा रैंक
49,267
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 100
एडिटर्स पॉइंट्स : 49,167
2 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (2 रेटिंग्स)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Abdul Siddiq
கூறிய விதம் அருமை, வார்த்தைகளும் அருமை...வாழ்த்துக்கள்
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स